NTR கூட சண்டை.. ராம்சரண் அப்படி இல்ல.. மேடையில் போட்டுடைத்த ராஜமௌலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: சென்னையில் நேற்று நடந்த  RRR படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். படத்தின் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இந்த படத்தின் அனுபவங்கள் குறித்து பேசினார்.

Advertising
>
Advertising

ராஜமெளலி என்றாலே பிரம்மாண்டம் தான். இவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்டு இந்திய சினிமாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டியது.

இவர் தற்போது RRR  படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்தியா முழுக்கப் பரவி உள்ளது.


பள்ளிக்கூடம்:

மேலும் நான் எவ்வளவு பெரிய ஆளானாலும் நாம் நம் பள்ளிக்கூடத்திற்கு சென்று Head master-ஐ  பார்க்கும்போது ஒருவித பயம் இருக்கும். அதுதான் நான் சென்னை வரும்போதெல்லாம் எனக்கு இருக்கிறது. ஏனென்றால் சென்னைதான் எனக்கு பள்ளிக்கூடம், ஹெட் மாஸ்டர், கல்லூரி, Principal, Teacher எல்லாமே‌. சென்னை மாநகரத்துக்கு வணக்கம், தமிழ் தாய்க்கு வணக்கம் என்று கூறினார். இன்று உலகத்தில் இருக்கும் அனைத்து இந்தியர்களும் RRR படத்தை எதிர்பார்க்கின்றனர். அமெரிக்காவில் 10 நாட்களுக்கு முன்பே முன் விற்பனை 2 மில்லியன் டாலர் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் இல்லை. ராம்சரண் மற்றும்  ஜூனியர் என்டிஆர் தான்.

கமல்ஹாசன் தமிழில் வெளியிட்ட '83' படத்தை பார்த்து ரஜினி செய்த டிவிட்டர் விமர்சனம்! வைரலான TWEET!


மேடையில் மூன்று பேர்:

ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் பற்றி பேசும்போது, ராம்சரண் சொன்னது உண்மைதான். "Child mentality Lion personality" தான் ஜூனியர் என்டிஆர். நானும் அவரும் சண்டை போடாத நாட்களே இல்லை. அவருடன் வேலை செய்வது ரொம்ப கடினமாக இருந்தது. நான் ஒன்றை நினைத்திருப்பேன், அதை அவரிடம் கூறி இருப்பேனா, இல்லையா என்று தெரியாது ஆனால் கரெக்டாக செய்துவிடுவார். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தெலுங்கு சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கே இது போன்ற நடிகர்கள் கிடைப்பது மிகவும் அதிர்ஷ்டம், என கூறினார்.


ராம்சரண் அப்படியில்லை

ராம் சரண் பற்றி கூறும் போது எல்லா நடிகரும் ஒரு சீனை அப்படி நடிக்க வேண்டும் இப்படி நடிக்க வேண்டும் என்று குழம்பிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் ராம்சரண் அப்படியில்லை நன்கு யோசித்து தனக்கு உரித்த நடிப்பில் அதை வெளிப்படுத்துவது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியது அதை ராம்சரண் சரியாக செய்வார். எல்லா நடிகர்களும் அப்படி செய்வதில்லை. இந்த இரண்டு பேருமே RRR படத்திற்கு காந்தம் போன்றவர்கள். நான் தான் உலகத்தில் மிக சந்தோசமாக இருக்கும் இயக்குனர் என பெருமிதமாகக் கூறினார்.


ஜனவரி 7
                  
ஜனவரி 7ஆம் தேதி RRR படம் வெளியாகிறது. பாகுபலி படம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும். இது என்னுடைய வாக்கு என கூறினார். மேலும் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். DVV Entertainment‌ தயாரிக்கும் இந்த படத்திற்கு, எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார், கே கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

S.S Rajamouli shared RRR experience in Pre release event.

People looking for online information on எஸ்.எஸ் ராஜமௌலி, ராம்சரண், Junior NTR, Ramcharan, RRR, S.S Rajamouli will find this news story useful.