தொடர்ந்து தெலுங்கு திரை துறையில் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வந்தவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
Also Read | VIDEO: சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி BIGGBOSS சீசன்-6 க்கு போட்டியாளரா வராங்களா? முழு தகவல்
பின்னர் யமதொங்கா, மஹதீரா ஆகிய தெலுங்கு படங்களில் முறையே ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்தனர். இந்த படங்கள் ஃபேண்டசி படங்களாகவும் ஹிட் கொடுத்தன. இதனை தொடர்ந்து பாகுபலி 2 பாகங்களாக வெளிவந்து இந்திய அளவில் ஹிட் மற்றும் வசூல் அடித்தது.
இதன் மூலம் தமிழ் உட்பட பல மொழிகளில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு திறமான இயக்குநராக அறியப்பட்டார். வரலாற்று காலத்தின் மித்தாலஜி ஃபேண்டஸி படமாக அமைந்த இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே ஐகானிக் என்கிற அந்தஸ்தை அடைந்தது. இதனை அடுத்து இந்திய சரித்திர புனைவு படங்களை இயக்குபவர்களில் ஒருவராக திகழும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆர் ஆர் ஆர் படம், ஆஸ்கர் விருது பெற பரிந்துறைக்கப்பட்டுள்ளது. பாகுபலி அளவுக்கு படம் அமையவில்லை என்றாலும், பாக்ஸ் ஆஃபிஸில் பயங்கர வசூல் செய்த பின் இது நெட்பிளிக்ஸில் ஒளிப்பரப்பானது.
எனவே, பாகுபலி எனும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை ஒரே படத்தில் இணைத்தார். கொமராம் பீமராவ் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு ஆகிய வெவ்வேறு பிரிட்டிஷ் காலக்கட்டத்து கதாபாத்திரங்களை ஒரே பீரியடில் வாழ்ந்ததாக கற்பனையாக புனைந்து ஒரு கதையை அமைத்தார். இந்த கேரக்டர்களில் முறையே ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை நடித்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படம், ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒன்று இரண்டு பிரிவுகளில் அல்ல. ஆம், இப்படத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பிரிவுகளின் விபரம் :
சிறந்த இயக்குநர் (ராஜமெளலி)
சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்)
சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்)
சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு)
சிறந்த பின்னணி இசை (கீரவாணி)
சிறந்த பட தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்)
சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே)
சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்)
சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்)
சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்)
சிறந்த தயாரிப்பு (சபு சிரில்)
சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி)
சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பணையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி )
சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்)
Also Read | உலகப்புகழ் பெற்ற பீச்சில் நடிகை கனிகா.. ரிசார்ட்டில் ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?