இயக்குனர் ராஜமௌலி முன்பு யாஷின் அப்பாவைப் புகழ்ந்து பேசியது இப்பொது வைரலாகி வருகிறது.
Also Read | "நான்.. சாவையே அடிக்குறவன்"… பிரபல தமிழ் சேனலில் பாலகிருஷ்ணாவின் ’அகண்டா’ ..
கேஜிஎஃப் 2 வெற்றி…
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது. கேஜிஎஃப் 2 திரைப்படம் , முதல் வாரம் கடந்து இரண்டாவது வாரத்திலும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டார். இந்த படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
PAN இந்தியா ஹீரோ யாஷ்…
.கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களின் வெற்றியை அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யாஷ் மாறியுள்ளார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு ரசிகர்கள் பாராட்டு மழைப் பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பற்றிய பழைய தகவல்கள் கூட இப்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
கவனம் ஈர்த்த ராஜமௌலியின் பாராட்டு…
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் நடந்த கேஜிஎஃப் 1 படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு ஒன்றில் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி கலந்துகொண்டு பேசியது மீண்டும் வைரலாக பரவி வருகிறது. அந்த மேடையில் “ யாஷின் அப்பா அருண் குமார், ஒரு பஸ் டிரைவர் என தெரிந்துகொண்டேன். யாஷ் இப்போது பெரிய ஹீரோ ஆகிவிட்டார். ஆனாலும் இப்போது அவரின் அப்பா இப்பவும் பஸ் டிரைவராகவே வேலை செய்து வருகிறார் என கேள்விபட்டேன். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏனென்றால் ஒரு பெரிய நடிகரின் அப்பா என்றால் தங்கள் வேலையை விட்டு வர நினைக்கலாம். யாஷ் கூட அப்படி அப்பாவை ஓய்வெடுக்க சொல்லி இருக்கலாம். ஆனால் யாஷின் அப்பா ’என் பையன் இந்த நிலைக்கு வர நான் இந்த வேலையைப் பார்த்துதான் உதவிசெய்தேன். அதனால் நான் இந்த வேலையை விட்டு வர முடியாது’ என நினைத்துள்ளார். என்னை பொறுத்தவரை யாஷை விட அவங்க அப்பாதான் ஒரு சூப்பர்ஸ்டார்” என பேசி இருந்தார். இந்த பேச்சு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8