இந்த மாஸ் நடிகருக்கு தமன்னாவைத் தொடர்ந்து ஜோடியான ஸ்ருதி ஹாசன்! செம்ம ஷூட்டிங் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: நடிகை ஸ்ருதி ஹாசன் சூப்பர்ஸ்டார் நடிகர்கருடன் நடிக்கும் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நிறை மாத கர்ப்பத்திலும் செம்ம டான்ஸ் ஆடிய நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் OLD THROWBACK வீடியோ

ஸ்ருதி ஹாசன் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் கடைசி படமான 'லாபம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த லாபம் திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.

மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

மேலும் ஸ்ருதிஹாசன் 'NBK 107' என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது பாலகிருஷ்ணாவின் கேரியரில் 107வது படமாக உருவாக உள்ளது. 'பலுபு' மற்றும் 'கிராக்' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய ஸ்ருதி, இயக்குனர் கோபிசந்துடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். இதனை சில நாட்களுக்கு முன் சிரஞ்சீவி டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்து கோண்டுள்ளார். படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாபி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சிரஞ்சீவி உடன் தமன்னா பாட்டியா வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் (போலா ஷங்கர்) நடித்து வருகிறார். இச்சூழலில் ஸ்ருதிஹாசனும் சிரஞ்சீவி உடன் இணைந்து நடிக்க உள்ளார். ஏற்கனவே லூசிபர் படத்தின் ரீமேக்கில் (காட்பாதர்) நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | கர்ப்பமான வயிறுடன் நடிகை சோனம் கபூர் நடத்திய பேஷன் போட்டோஷூட்... நடிகை சமந்தா அடித்த கமெண்ட்

தொடர்புடைய இணைப்புகள்

Sruthi haasan Started shooting of Mega 154 with chiranjeevi

People looking for online information on மெகா154, ஸ்ருதி ஹாசன், Chiranjeevi, Mega 154, Sruthi Haasan will find this news story useful.