சென்னையில் வசிக்கும் ஸ்ரீதர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. கஸ்தூரிக்கு அல்ஸைமர் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, ஸ்ரீதர் தனது வயதான அம்மாவைப் பார்க்க, தனது சொந்த ஊருக்குச் செல்கிறார்; கஸ்தூரியை ஒரு கேர் டேக்க்டரிம் ஒப்படைத்து, கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி கிளம்பி இருந்தார்.

லாக்டவுன் பிரச்சனையால் சென்னைக்குத் திரும்ப முடியாமல், மனைவியிடம் சென்று அடைய முடியாமல் ஸ்ரீதர் ஊரில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். தனது மனைவியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக பயப்படத் தொடங்குகிறார். ஒரு உறவினரின் அறிவுறுத்தலின் பேரில், ஸ்ரீதர் தயக்கத்துடன் தனது பக்கத்து வீட்டுக்காரரான சிவாவை உதவிக்கு அழைக்கிறார்.
சிவாவை அவருக்கு அவ்வளவாக பிடிக்காது. அவர்களுக்கிடையில் எவ்வித நட்பும் இல்லாத போதும், சிவா உதவ முடிவெடுக்கின்றார். காரணம் கஸ்தூரி அவரது மறைந்த தாயை நினைவுபடுத்துவதால் அவர் மீது அவருக்கு மென்னுணர்வு உண்டு.
இருவரும் சென்னைக்கு எப்படியோ வந்து சேர, வீட்டில் கஸ்தூரியை காணவில்லை. சிவா, ஸ்ரீதர் இருவரும் கவலையுடன் உள்ளனர்.. எப்படியாவது தேடிப் பிடிக்க முடிவு செய்கின்றனர். ஆனால் ஒரு வழியும் தென்படவில்லை. கஸ்தூரி எங்கேதான் போயிருப்பார்?
ஸ்ரீப்ரியா, நாஸர், நித்யா, பானு பிரகாஷ், சிவக்குமார் உள்ளிட்டோர் இந்தக் குறும்படத்தில் நடித்துள்ளனர். எடிட்டிங் - ரூபன், இசை - கிருஷ். இப்படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஸ்ரீப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீப்ரியா எழுதிய “யசோதா” குறும்படத்தின் வீடியோ இதோ