குண்டாக இருப்பதால் ஸ்ரீகாந்த் தேவா காதலை நிராகரிக்கும் VJ சித்ரா.. வைரல் ஆல்பம் பாடல்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஶ்ரீ காந்த் தேவா, மறைந்த நடிகை சித்ரா நலமுடன் நடித்த ‘குண்டன்’ தனியிசை ஆல்பம் வீடியோ குறித்தும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

விஜய் டிவியின் சின்னத்திரை தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக நட்சத்திரமாக வலம் வந்தவர், வி‌ஜே சித்ரா.  கடந்த 2013 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா,பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாக மக்களிடையே பிரபலமடைந்தார். ஆனால் கடந்த 2020 டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா மரணம் அடைந்தார்.  அவருடைய மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இவரது மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல சின்னத்திரை பிரபலங்கள் இடையேயும் கடும் அதிர்ச்சியையும், மனவேதனையையும் அப்போது உருவாக்கியது. இந்நிலையில் சித்ரா மறைந்தாலும் அவர் நடித்த படைப்புகளான கால்ஸ் திரைப்பம் உள்ளிட்டவை வெளியாகின.

அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நடித்த ஆல்பம் பாடல் பிஹைண்ட்வுட்ஸில் வெளியாகியுள்ளது. இதில் சித்துவிடம் காதலை சொல்லும் ஸ்ரீகாந்த் தேவா பார்க்க குண்டாக இருப்பதால் அவரது காதலை சித்ரா நிராகரித்துவிட்டு வேறொருவரை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சித்ரா சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேச, சார்ஜர் வெடித்து முகம் அவலட்சணம் ஆகிறது. அப்போது அந்த காதலன் விட்டுச் செல்ல, அங்கு மருத்துவமனைக்கு வரும் ஸ்ரீகாந்த் தேவா மலர்க்கொத்துடன் தன் காதலை சமர்ப்பித்துவிட்டு செல்கிறார். இதனால் உண்மையான காதல் அழகில் இல்லை, மனதை பார்த்து வருவது என்பதை உணர்ந்து உடைந்து அழுகிறார் சித்ரா.

முன்னதாக இந்த ஆல்பம் பாடலை குறித்து சில தகவல்களை பிஹைண்ட்வுட்ஸில் பகிர்ந்த ஸ்ரீகாந்த் தேவா, “இந்த குண்டன் ஆல்பம் தான் சித்ரா நடிப்பில் கடைசியாக வெளியாகிறது.  இந்த பாடலை உருவாக்க முனைப்பு காட்டியது சித்ரா தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிஸியாக நடத்தி வரும் போதே சித்ரா இந்த ஆல்பத்தில் நடித்தார்.

ஒரு நாள் கால்சீட்டில் எடுக்க நினேத்தோம். இரண்டாம் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் பணத்தை  கொடுத்த போது கோபப்பட்டு விட்டார். இந்த ஆல்பத்தில் நடிக்க சித்ரா பணம் எதுவும் வாங்கவில்லை. இந்த ஆல்பத்தை வெளியிட மனம் வரவில்லை. இருந்தாலும் சித்ராவின் ஆசியோடு இப்போது வெளியாகிறது.  இந்த ஆல்பத்தை சித்ராவின் ரசிகர்கள், அவரின் பெற்றோருக்கு டெடிகேட் செய்கிறோம்.” என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆல்பம் லிங்க் இணைப்பில் உள்ளது. 

குண்டாக இருப்பதால் ஸ்ரீகாந்த் தேவா காதலை நிராகரிக்கும் VJ சித்ரா.. வைரல் ஆல்பம் பாடல்.. வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Srikanth Deva Late VJ Chithra Starring new album song is Out

People looking for online information on Srikanth Deva, Vj chithra will find this news story useful.