காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல ஸ்ரீசாந்த்.. இந்த ரோல்ல தான் நடிக்கிறாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Advertising
>
Advertising

Also Read | பிரசவ வலி.. குழந்தை பிறந்த தருணம்.. காஜல் அகர்வாலின் பதிவு! தீயாய் பரவும் ஃபோட்டோ

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த படத்தின் அடுத்த பாடலான டிப்பம் டப்பம் பாடல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சமந்தா மற்றும் அவரின் காதலராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். பப்பில் பவுன்சராக இருக்கும் விஜய் சேதுபதி சமந்தாவின் பார்வைக்காக ஏங்குவதாகவும் அந்த உணர்வைப் பாடுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை அந்தோனி தாசன் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியானதில் இருந்து 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த பாடலில் சமந்தாவின் காதலனாக ஸ்ரீசாந்த் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இப்படத்தில் முகமது மோபி என்ற கேரக்டரில் ஸ்ரீசாந்த் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சமந்தாவின் காதலனாக ஸ்ரீசாந்த் நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல ஸ்ரீசாந்த்.. இந்த ரோல்ல தான் நடிக்கிறாரா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sreesanth acted in Kaathu Vaakula Rendu Kaadhal Movie as Samantha Lover

People looking for online information on KRK movie, KRK movie Updates, Nayanthara, Samantha, Sreesanth, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.