சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த பிரபல விளையாட்டு வீராங்கனை.. வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல விளையாட்டு வீராங்கனை சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உலகப்புகழ் பெற்ற கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த தமன்னா.. வைரல் ஃபோட்டோ

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் நடைபெற்றறது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனின் BTS புகைப்படங்கள்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை  ஜோஷ்னா சின்னப்பா சந்தித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது தொடர்பான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோஷ்னா சின்னப்பா பதிவிட்டுள்ளார். "இந்த நாளை என்றும் நினைவில் வைத்திருப்பேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிறப்பான தருணத்தில் சநதித்துள்ளேன்" என ஜோஷ்னா சின்னப்பா பதிவிட்டுள்ளார்.

 

Also Read | திருமணத்திற்கு பிறகு ப்ரியா மணி Re Entry கொடுக்கும் தமிழ் படம்..? ரிலீஸ் எப்போ? சூப்பர் அப்டேட்..!

தொடர்புடைய இணைப்புகள்

Squash champion Joshna Chinappa meet Superstar Rajnikanth

People looking for online information on Rajinikanth, Squash champion, Squash champion Joshna Chinappa, Superstar Rajnikanth will find this news story useful.