BOX OFFICE: இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த SPIDER-MAN NO WAY HOME!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில்,  Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது  Spider-Man No Way Home திரைப்படம்.

Advertising
>
Advertising

Spider-Man No Way Home திரைப்படம்  இந்தியா முழுதும் 2021 டிசம்பர் 16 அன்று தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு,மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் முதல் நாளில் 41.50 கோடி ரூபாய் GROSS கலெக்சனாக வசூலித்தது. 32.67 கோடி ரூபாய் நெட் கலெக்சனாக கிடைத்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் நான்கு நாளில் இந்த படம் 138.55 கோடி ரூபாயை GROSS கலெக்சனாக வசூலித்துள்ளது. 108.37 கோடி ரூபாய் நெட் கலெக்சனாக கிடைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Below is the breakup Collections: 

GBOC - Gross Box Office Collection ; NBOC - Nett Box Office Collection


Thursday -  41.50 Cr GBOC - 32.67 Cr  NBOC
                    

Friday -  25.67 Cr GBOC - 20.37 Cr NBOC
              

Saturday - 33.67 Cr GBOC - 26.10  Cr NBOC
                  

Sunday – 37.71 Cr GBOC - 29.23 Cr NBOC 
                

Total:   138.55 Cr  GBOC - 108.37  Cr NBOC


                 

உலகம்  முழுதும் 2021 டிசம்பர் 16 வெளியான இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள், ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியது. மார்வல் திரையுலகத்தில் Spider-Man சூப்பர் ஹீரோவின், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் Spider-Man No Way Home. இப்படத்தில் Tom Holland சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும் அவருக்கு ஜோடியாக Michelle 'MJ' பாத்திரத்தில் Zendaya  வும் நடித்துள்ளனர். இவர்களுடன் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய Doctor Stephen Strange பாத்திரத்தில்  Benedict Cumberbatch நடித்துள்ளார்.

இப்படம் மல்டிவெர்ஸ் எனும் வித்தியாசமான கான்செப்டில் பல உலகங்களை இணைக்கும் கதைக்கருவில் உருவாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன் வந்த Spider-Man பட பாகங்களின் முக்கிய  கதாப்பாத்திரங்கள் இப்படத்தில் மீண்டும் வருகிறது. 10 வருடங்களுக்கு முன் ரசிகர்களின் கனவுகளை நிரப்பிய Doctor Otto Octavius, Green Goblin மற்றும் Electro பாத்திரங்கள் மீண்டும் இப்படத்தில் வருகின்றன. மேலும் இப்படத்தில் மூன்று ஸ்பைடர் மேன் பாத்திரங்கள் உள்ளன. இதனால் உலகம் முழுதும் படத்திற்கு வரலாறு காணாத அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

'Spider-Man: No Way Home' Box Office Gross Rs 138.55 Cr

People looking for online information on 100 crore club, ஸ்பைடர் மேன், Box office, Box Office Collection, India Box Office, Spider man, Spider Man Box Office, Spider-Man No Way Home will find this news story useful.