கார் விபத்தில் ஹாலிவுட் நடிகை மரணம்.! பிரியங்கா சோப்ரா உருக்கமான பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் கார் விபத்தில் பலியானதை அடுத்து,  அவருக்கு உலகம் முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "கடைக்குட்டி சிங்கம் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த விருமன்" - வெளியான சூப்பர் தகவல்

ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலக ஹாலிவுட் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தான் தற்போது கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 53.

கடந்த ஆகஸ்டு 5ம் தேதி  நடிகை அன்னே ஹெச், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில், தனதுகாரில் சென்றுகொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கினார். அப்போது அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்துவிட, அந்த விபத்தில் அன்னே ஹெச் படு காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை அன்னே ஹெச், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து உருக்கமாக பதிவிட்ட பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, "அன்னே ஹெச்சின் குழந்தைகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் துக்கப்படுகிற அனைவருக்கும் என் ஆறுதல். அன்னே ஹெச்சின் - உங்களைத் தெரிந்துகொண்டதில், உங்களோடு இணைந்து பணியாற்றியதில் பெருமையாக இருந்தது. நீங்கள் ஒரு அழகான நபர் மற்றும் நம்பமுடியாத நடிகை. என் இதயத்தில் உனக்கு என்றும் தனி இடம் எப்போதும் உண்டு" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | EXCLUSIVE: "இன்னொரு பெரிய படம் பன்றேன்.." SECRET அப்டேட் கொடுத்த S.J. சூர்யா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Special place in my heart, Priyanka Chopra tributes Anne Heche

People looking for online information on Priyanka Chopra, RIP Anne Heche, RIPAnneHeche will find this news story useful.