தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ ராஜ். இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் ஷ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இந்த வருடம் பிக்பாஸ் போட்டியில் நடிகர் ரியோ ராஜ் கலந்து கொண்டிருந்தார். இதில் இவரது நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
ரியாவுக்கு குடும்பம் என்றால் உயிர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பிக் பாஸ் வீட்டில் இருந்து பொழுது கூட அவரது மனைவி அவரை Freeze டாஸ்க்கின் போது சந்திக்க வந்தார். அப்பொழுது ரியோ அவரை பார்த்த உடன் மனமுடைந்து ஒரு சிறு பிள்ளையை போல அழுது விட்டார். அந்த தருணம் பிக்பாஸ் சீசன் 4-ல் மிக முக்கியமான ஒரு நெகிழ்ச்சி தருணம். அந்த அளவிற்கு தனது மனைவி மற்றும் மகள் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது ரியோ வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது. அவரது மகள் ரித்திக்கு ஒரு வயது நிரம்பியுள்ளதால். குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மிகவும் விமரிசையாக நடந்த இந்த விழாவில் ஆரி உட்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் கொண்டுள்ளனர். இந்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்ட ரியோ இவ்வாறு கூறியுள்ளார், "இங்கே வந்து எங்களது குட்டி இளவரசிக்கு வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி. மற்றும் மனதார வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் மிகவும் நன்றி" என்று கூறியுள்ளார்.