LATEST : SPB-ன் உடல்நிலை பற்றி சரண் தகவல்.. ''இது நிச்சயமா ஒரு நல்ல நாள்..'' - நெகிழ்ச்சி வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தற்போது அவர் எக்மோ கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் எஸ்.பி.பியின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ''இன்று டாக்டர்களுடன் பேசினேன். அப்பாவால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசுவதற்கு பதிலளிக்க முடிகிறது. அவர் 90 சதவீதம் மயக்கநிலையில் இருந்து வெளியில் வந்துள்ளார். எங்கள் குடும்பத்தின் சார்பாக நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பலர் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்தார்கள். விரைவில் அவர் குணமாகி வருவார் என உறுதியாக நம்புவோம். அப்பாவின் உடல்நிலை குறித்து நான் கொடுத்து வரும் அப்டேட்களை தொடர்ந்து வருபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல நாள்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SPB உடல்நிலை பற்றி எஸ்.பி.சரண் | SP Charan opens on singer SP Blasubrahmanyam health condition

People looking for online information on SP Balasubramaniam, Sp charan, SPB, SPB Health Condition will find this news story useful.