பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்த போதிலும் அவர் இதய - சுவாச பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது.
இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்பிபி நம்மை விட்டு இன்று இயற்கை எய்தியுள்ளார். இந்த செய்தியை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளனர். தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்ட்ட அவர் நம்மிடம் பேசிய கடைசி வீடியோ இதுதான். அந்த காந்த குரலை நேரடியாக நாம் கேட்டதும் அப்போதுதான். இதோ அந்த வீடியோ..!