சோனியா அகர்வால் SPB சரண் புகைப்படம்.. இணையத்தில் செம்ம வைரல்.. உண்மை பின்னணி இதுதான்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பி-ஐ அனைவரும் அறிவர். இன்றும் அனைவர் நெஞ்சிலும் நீங்காத பாடல்களை பாடிய அமரர்.

Advertising
>
Advertising

அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் நிறைய பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்த தமிழில் தவிர்க்க முடியாத ஒரு பாடகர். தமிழ் சினிமாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போலவே நடிகராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகும் கலக்கி வருகிறார் எஸ்.பி.பி சரண்.

நிறைய தொலைக்காட்சி தொடர்களில் நடுவராக இருந்து புதிதாக பாடும் பலருக்கும் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார் எஸ்.பி.பி.சரண். குறிப்பாக விஜய் டிவியில் நடக்கும் சூப்பர் சிங்கர் ஷோவில் எஸ்.பி.பி.சரண் நடுவராக இருக்கிறார். பாடகர்களின் திறமைக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப எஸ்.பி.பி சரண் தம்முடைய ஆலோசனைகளை வழங்கி, அவர்களை ஊக்குவிக்கும் பணியை இந்த மாதிரி ஷோக்களில் செய்து வருகிறார்

சரோஜா, வ குவார்ட்டர் கட்டிங், உள்ளிட்ட பல திரைப்படங்களில் எஸ்.பி.பி சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் எஸ்.பி.பி.சரண் தற்போது நடிகை சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சோனியா அகர்வால், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர். செல்வராகவனின் முன்னாள் மனைவியான நடிகை சோனியா அகர்வால் பின்னாட்களில் சீரியல்களிலும் தோன்றினார். இந்த நிலையில்தான் அவர் எஸ்.பி.பி சரணுடன் ஒரு புகைப்படத்தில் நிற்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை எஸ்.பி.பி.சரண் பதிவிட்டிருக்கிறார்.

இதேபோல அவர் இன்னொரு புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த பிறகு தான் பலருக்கும் உண்மை தெரிய வந்திருக்கிறது. விஷயம் என்னவென்றால் அந்த இன்னொரு புகைப்படத்தில் எஸ்.பி.பி.சரண், அஞ்சலி, சந்தோஷ் பிரதாப், சோனியாஅகர்வால் எல்லாமே நிற்கின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து வெப்சீரிஸ் நடிக்கிறார்கள்.

இதையே எஸ்.பி.பி சரண் ஷேர் செய்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வெப் சீரிஸில் இணைந்த இந்த காம்போவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அந்த வெப் சீரிஸைக் காண ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

SPB Charan with Sonia Agarwal viral pic here is the backstory

People looking for online information on Sonia Agarwal, SPB Charan will find this news story useful.