பாடகர் எஸ்பிபி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
மேலும் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இசைஞானி இளையராஜா 'எழுந்து வா' என தனது நண்பருக்காக உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்பிபியின் மகனான எஸ்.பி.சரண் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மருத்துவர்கள் அவரது உடல்நிலை கிரிட்டிக்கல் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரது உடல்நிலை ஸ்டேபிளாக இருக்கிறது. வென்டிலேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அவர் மெதுவாக குணமடைவார். உங்கள் வேண்டுதல்களுக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.