எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி குறித்து, அவரது ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற ட்ரைவர் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.
இந்நிலையில் தற்போது எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் அவரது ஆம்புலன்ஸை இயக்கிய சாந்தகுமார் நம்மிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் நான்தான் அவரின் வண்டியை இயக்கினேன். அவரது தலை அந்த ஸ்ட்ரெச்சரில் கூட படக்கூடாது என தாங்கி பிடித்து கொண்டேன். நாங்கள் எதிர்ப்பார்க்காத அளவுக்கு, அவரைக் காண பலர் குடும்பம் குடும்பமாக சாலைகளில் வந்தனர். குறிப்பாக 50 வயது உள்ள ஒரு அம்மா, காரை நிறுத்தி விட்டு, சின்ன குழந்தை போல அடம்பிடித்து, அவருக்கு மரியாதை செலுத்தினார்'' என அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோவின் தொகுப்பு இதோ.