கையில வீர் ரஜினிகாந்த்.. பின்னாடி தந்தை ரஜினிகாந்த்.. சௌந்தர்யாவின் வைரல் ஃபோட்டோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

நடிகர் ரஜினிகாந்த் - லதா தம்பதியரின் மகளும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் சகோதரியுமானவர் இயக்குநர் சௌந்தர்யா.

இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்னும் 3 டி அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த்தின் 47 ஆண்டுகள் திரைப் பயணம் நிறைவு பெற்றதை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர், சில புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதில், தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் சூப்பர்ஸ்டார் இருக்கும் புகைப்படங்களும், அசத்தலான கேப்ஷன்களும் இடம்பெற்றிருந்தது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக, இயக்குனர் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது தொடர்பான செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதில், “கடவுளின் அபரிமிதமான கருணையுடனும், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடனும் 🙏🏻😇விஷாகன் (கணவர்), வேத் (முதல் குழந்தை) மற்றும் நானும் இன்று 11/9/22 வேதின் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .. எங்களின் அற்புதமான மருத்துவர்களுக்கு நன்றி” என சௌந்தர்யா குறிப்பிட்டிருந்தார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும், சௌந்தர்யா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அதே போல, மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்திற்கும் நெகிழ்ந்து போய் வாழ்த்துக்களை ரசிகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் சௌந்தர்யா ரஜனிகாந்த் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம், இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கையில் குழந்தையுடன் சவுந்தர்யா ரஜினிகாந்த் இருக்க, அவர்களின் பின்னால் ரஜினிகாந்த் நிற்கிறார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த சௌந்தர்யா, தனது கேப்ஷனில், "நேற்று எனக்காக நேரம் எடுத்துக் கொண்டு எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வீர் பாப்பா என்னும் சிறந்த பரிசை இந்த ஆண்டு எனக்கு கடவுள் அளித்துள்ளார்.


மேலும், இந்த அற்புதமான கடவுளின் குழந்தை எப்போதும் என் பின்னால் உள்ளது. வாழ்க்கை என்பது ஒரு உண்மையான வரம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Soundarya rajinikanth latest pic with her baby and rajinikanth

People looking for online information on Rajinikanth, Soundarya rajinikanth, Veer Rajinikanth will find this news story useful.