SOUNDARYA RAJINIKANTH : மீண்டும் தாத்தாவான ரஜினிகாந்த்.!. சௌந்தர்யாவுக்கு பிறந்த 2-வது குழந்தை.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் - லதா தம்பதியரின் மகளும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் சகோதரியுமானவர் இயக்குநர் சௌந்தர்யா. 

Soundarya gives birth to second baby Rajinikanth grandfather
Advertising
>
Advertising

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்தின் 47 ஆண்டுகள் திரைப் பயணம் தொடர்ந்து வரும் நிலையில் ரஜினிகாந்தின் மனைவி மற்றும் மகள்கள் அவருடைய திரைப்பயண கொண்டாட்டத்தில் இணைந்தனர்.

Soundarya gives birth to second baby Rajinikanth grandfather

அந்த சமயத்தில், ரஜினிகாந்த்தின் மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், தமது தாயாரும், ரஜினியின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் குறித்து ஒரு நெகழ்ச்சி பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “எங்கள் லவ்லி ஜில்லுமா.. அப்பாவின் மிகப்பெரிய ரசிகர். எங்கள் குடும்பத்தின் சூப்பர்ஸ்டார்” என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் சௌந்தர்யாவுக்கு 2வது குழந்தை பிறந்துள்ள செய்தி குறித்து சௌந்தர்யா, தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில், “கடவுளின் அபரிமிதமான கருணையுடனும், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடனும் 🙏🏻😇விஷாகன் (கணவர்), வேத் (முதல் குழந்தை) மற்றும் நானும் இன்று 11/9/22 வேதின் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .. வீர் ஆசிர்வதிக்கப்பட்ட எங்கள் மருத்துவருக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தா ஆகியிருக்கிறார் என நெகிழ்ந்துபோய் ரஜினிகாந்த்துக்கும், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Soundarya gives birth to second baby Rajinikanth grandfather

People looking for online information on Rajinikanth, Soundarya rajinikanth will find this news story useful.