நடிகர் சூரி குடும்பத்துடன் அழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Also Read | "21 வருசத்துக்கு முன்னாடி".. தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேதாளம், அண்ணாத்த, டான், சீமராஜா உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கிய சூரி, தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.
தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூரி குடும்பத்துடன் மதுரை அழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அழகர் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் முன் அழகர் மலைக்கு சென்று நூபுர கங்கையில் தீர்த்தமாடி ராக்காயி அம்மனை வழிபட்டார். அங்கு நடிகர் சூரிக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பழமுதிர்சோலை மலையில் முருகனை தரிசனம் செய்தார்.
அவருக்கு சோலைமலை முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கள்ளழகர் கோயிலுக்கு வந்து பதினெட்டாம் படி கருப்பனை வணங்கி விட்டு, பின்னர் சுந்தர்ராஜ பெருமாளை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Also Read | ஸ்வீட் எடுங்க 😍.. அப்பாவான அட்லி.. மோஷன் வீடியோ வெளியிட்டு குழந்தை பிறப்பை அறிவித்த அட்லி!