பழங்குடியின போராளியை பிடிக்க போகும் போலீஸ்.. வெற்றிமாறனின் விடுதலை டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டிய பிரபல நடிகை.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

ரயில் கவிழ்ப்புக்கு காரணமான மக்கள் படை என்ற தீவிரவாத அமைப்பின் போராளிகளை என்கவுண்டர் மூலம் அழித்தொழிக்கும் போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

Images are subject to © copyright to their respective owners.

மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

உயர் அதிகாரியிடம், கோபம் வந்தால் "அடிப்பேங்கயா" என்ற சூரியின் வசனமும், "மனுசன் பொறக்கறப்பவே ஒருத்தன் மேல கீழ சைடுனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதியா? சமுதாயத்தில் எல்லாரும் ஒன்னுனு போராடுற நாங்க பிரிவினைவாதியா?" என்ற விஜய் சேதுபதி பேசும் வசனமும் டிரெய்லரில் முக்கிய அம்சமாக உள்ளது.

விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரபல விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. வைரலாகும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Soori Vijay Sethupathi Viduthalai Movie Trailer Released

People looking for online information on Soori, Viduthalai, Viduthalai Movie Trailer, Vijay Sethupathi will find this news story useful.