BREAKING: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் மிக முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தின் மிக முக்கிய அப்டேட் தெரிய வந்துள்ளது.

இந்த படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் அடுத்த வாரம் முதல் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் திண்டுக்கல் பகுதிகளில் நேரடியாக சென்று படப்பிடிப்பு பகுதிகளை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Soori Vijay Sethupathi Vetrimaaran Viduthalai Movie Update

People looking for online information on Ilaiyaraaja, Soori, Vetrimaaran, Viduthalai, VijaySethupaythi will find this news story useful.