சூரி & விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை'.. TV ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் சேட்டிலைட் டிவி உரிமத்தை பிரபல முன்னணி டிவி சேனல் கைப்பற்றி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிம்பு - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பத்து தல'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? அடடே

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது.

விடுதலை படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின்  சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றி உள்ளது. கலைஞர் டிவியின் லோகோ விடுதலை பட போஸ்டரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | TVS 50ல் இமயமலை சென்ற ரசிகர்.. அஜித்தின் நண்பரிடம் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய AK!

தொடர்புடைய இணைப்புகள்

Soori Vijay Sethupathi Vetrimaaran Viduthalai Movie TV Rights Sold

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Viduthalai Movie Updates, Vijay Sethupathi will find this news story useful.