சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் "விடுதலை".. விஜய் சேதுபதி வெளியிட்ட இதுவரை காணாத BTS PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஒரு பகுதி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தின் BTS போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூரி போலீசாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற படங்களை தயாரித்தவர்.

விடுதலை படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பன்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் துவங்கி உள்ளது. இந்த படத்தின் புதிய BTS புகைப்படங்களை விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

30 நாட்கள் திண்டுக்கல் படப்பிடிப்புடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடைகிறது.  மேலும் விடுதலை படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை படத்துக்கு பின் முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 

வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

 

Tags : Viduthalai

Soori Vijay Sethupathi Vetrimaaran Viduthalai movie BTS

People looking for online information on Viduthalai will find this news story useful.