விடுதலை - 1 படத்தின் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | டிவிட்டரில் ரொமான்ஸ் செய்த வந்தியத்தேவன் & குந்தவை நாச்சியார்! செம்ம வைரல் ட்வீட்ஸ்😍

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Images are subject to © copyright to their respective owners.

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | AGA NAGA: PS - 2 படத்தின் முதல் சிங்கிள் . வெளியான கார்த்தி & த்ரிஷாவின் ரொமான்டிக் பாடல்..

தொடர்புடைய இணைப்புகள்

Soori Vetrimaaran Vijay Sethupathi Viduthalai Movie Release Date Announced

People looking for online information on Soori, Vetrimaaran, Viduthalai, Viduthalai Movie Release Update, Vijay Sethupathi will find this news story useful.