போட்றா வெடிய... இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் 'சூரரைப் போற்று'...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது.

தற்போது 'சூரரைப் போற்று' படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட்டது. இந்நிலையில் 366 படங்களில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரைப் போற்று இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பட்டியல் இறுதி செய்யப்பட்டநிலையில், மார்ச் 5 முதல் 10 வரை அகாடெமி வாக்குப்பதிவு தொடங்கும்,  மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள். உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர் படக்குழுவினர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai pottru to enter into oscars ஆஸ்கர் போட்டியில் சூரரைப் போற்று

People looking for online information on Soorarai Pottru will find this news story useful.