KGF தயாரிப்புடன் கைகோர்க்கும் ‘சூர்யாவின்’ ஹிட் பட இயக்குநர் ?? சம்பவம் இருக்கு போலயே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

hombale films தயாரிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் கேஜிஎஃப்.

நடிகர் யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், பெரும் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வெளியான இந்த திரைப்படம் பெரும் வசூலைக் குவித்ததை அடுத்து, தென்னிந்தியா முழுவதும் ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பால் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரானது. இதையும் இதே hombale films தயாரித்துள்ளது.

கேஜிஎஃப் திரைப்படத்தின் 2-ஆம் பாகம், ஏப்ரல் 22, 2022-ஆம் வருடம் வெளியாவதாக மிக அண்மையில்தான் இந்த திரைப்படத்தின் ஹீரோ யஷ், தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனிடையே பிரபாஸ் நடிப்பில் சலார் எனும் திரைப்படத்தை கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இவை எல்லாவற்றுக்கும் காரணமான ஒற்றைப் பெயர் கேஜிஎஃப்.

கேஜிஎஃப்-ன் இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான hombale films-உடன் அடுத்து கைகோர்க்க போகும் முக்கிய இந்திய இயக்குனர் பற்றிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.

ஆம், சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி  அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, கற்பனையாக எடுக்கப்பட்ட இந்த ஹிஸ்டாரிக்கல் ஃபிக்‌ஷன் வகை திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடிக்க சுதா கொங்காரா இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெகுஜன மக்கள் அனைவரையும் கவரும் வகையிலும், அதே சமயத்தில் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெறும் படமாகவும் புகழ்பெற்றது.

இதனை அடுத்து சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்காராவின் அடுத்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்தான் கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனமான hombale films தயாரிப்பில் சுதா கொங்காரா தமது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ஹீரோ உள்ளிட்ட மற்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read: எவ்ளோ மாசம் ஆச்சு ... தியேட்டர்ல.. அதுவும் விஜய் சேதுபதி படம் ரிலீஸ்!!. எப்போ தெரியுமா? மாஸ் அறிவிப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai Pottru Sudha Gonkara KGF Hombale Films சுதா கொங்காரா

People looking for online information on Soorarai Pottru, Sudha Kongara, Suriya, Yash will find this news story useful.