சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.
இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சூரரைப்போற்று படத்தை நேற்றைய தினம் பார்த்துள்ளார். அவர் தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறும்போது "சூரரைப் போற்று... நிறைய இடங்களில் கற்பனை கலந்து இருக்கிறார்கள். ஆனாலும் எனது புத்தகத்தின் கதையை சிறப்பான முறையில் வெளிக்கொணர்ந்து உள்ளார்கள். ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல் இருந்தது. நேற்றைய தினம் தான் படத்தைப் பார்த்தேன். குடும்பம் சார்ந்த சீன்களில் என்னால் சிரிப்பையும், அழுகையையும் கட்டுபடுத்த முடியவில்லை. பழைய ஞாபகங்களை கொண்டுவந்து விட்டது" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சூர்யா அவரது பதிவை பகிர்ந்து "அன்பார்ந்த கேப்டன். உங்களுக்கு இது பிடித்து இருக்கிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் விரும்பி நாட்டிற்காக செய்த செயலுக்கு எங்களுடைய சின்ன மரியாதை. இன்னும் நிறைய பேர் இதை பார்த்து உத்வேகம் அடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.