சூர்யா ரசிகர்களுக்கு குட்நியூஸ்.. சூரரைப் போற்று.. தியேட்டரில்.. எங்கு தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப்போற்று திரைப்படம் திருச்சூரில் உள்ள  திரையரங்கில் வெளிவர போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Advertising
>
Advertising

 


சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி போன்ற பலர் நடித்து வெளிவந்த படம் சூரரைப்போற்று. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் பல சர்ச்சைகளை தாண்டி பல பாராட்டுகளைப் பெற்றது.

இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான்  ப்ரைமில் வெளிவந்தது. சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் தொடர்ந்து அமேசான் ப்ரைம் டைமில் வெளியானதால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. அதையெல்லாம் தாண்டி இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.

 

சூர்யாவின் கதாபாத்திரமும், நாயகியான அபர்ணா பாலமுரளி கதாபாத்திரமும் அழுத்தமாக அமைந்து இப்படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டுள்ள படம் எப்பொழுதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் நிலையில் இந்தப் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஜி.வி பிரகாஷ் குமாரின் இசை அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் வரும் காட்டு பயலே என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அமேசான்  ப்ரைமில்  பார்த்து ரசித்த இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியுமா என்று பல ரசிகர்கள் ஏங்கித் தவித்தனர். அந்த கனவை நினைவாக்கும் வகையில் இந்தப்படத்தை திருச்சூரில் உள்ள திரையரங்கில்  வெளியிட திட்டமிட்டுள்ளனர். பெண் ரசிகர்கள் ஒன்றிணைந்து இந்த மறு ரிலீஸ் செய்யபோவதாகும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி சூர்யா ரசிகர்கள் மட்டும் இல்லாமல், சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Soorarai Pottru going to hit the big screen at Thrissur

People looking for online information on AparnaBalamurali, SooraraiPotru, SudhaGongara, Surya will find this news story useful.