'தீபாவளி'க்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்... எந்தெந்த படம் OTT-ல ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பர். பெரிய நடிகர்களின் படங்கள் ஆண்டுதோறும் தீபாவளிக்கு வெளியாகும் என்பதும் ஒரு காரணமாக இருக்கும். ஆனால் கொரோனா காரணமாக இந்து ஆண்டு திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் OTT பிளாட்பார்ம்களின் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில், தீபாவளி தினத்தில் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மறுபுறம் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல சன் நெக்ஸ்ட்டில் மாயா பஜார்(ரீமேக்) திரைப்படமும் நெட் ப்ளிக்சில் அந்த காரம் என்னும்  திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் படங்களின் வெளியீடு இருக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.  

Tags : Suriya

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai Pottru and new Tamil movies released for Diwali on OTT

People looking for online information on Suriya will find this news story useful.