இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது.
உலகம் முழுவதும் மக்களின் தினசரி வாழ்வில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இந்த பரவல் கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், இரண்டாவது அலை மீண்டும் எழுச்சி பெற்று, குறிப்பாக இந்தியாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி பெற மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்க முன்வந்தனர். அவர்களில் ஒருவர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்த நடிகர் பரேஷ் ராவல். அவரும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருந்தார். ஆனால், இப்போது,சில வாரங்களுக்கு பிறகு, நடிகர் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "துரதிர்ஷ்டவசமாக, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.