5 தேசிய விருதுகளை வென்று அசத்திய சூரரைப் போற்று.. இது வேற லெவல் சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற 'பொம்மி' அபர்னா பாலமுரளி கிருஷ்ணன்!

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சூரரைப் போற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் வென்றுள்ளார்.

மேலும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை சுதா கொங்கரா, ஷாலினி உஷாதேவி, ஆலிப் சுர்தி, கணேஷா ஆகியோர் வென்றனர். மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டெல்லியில் நடந்த 68வது திரைப்பட விருதுகள் அறிவிக்கும் நிகழ்வில் இதனை மத்திய அரசு சார்பில் தகவல் & ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்தது.

சூரரைப் போற்று  படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.  சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஜெயிச்சிட்ட மாறா! சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை வென்ற சூர்யா.. ! ரசிகர்கள் வாழ்த்து!

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai Potru Won 5 National Film Awards including Best Screen play Film BGM

People looking for online information on National Film Awards, National Film Awards 2022, Soorarai Potru, Soorarai Potru Won 5 National Film Awards, Suriya will find this news story useful.