சூரரைப் போற்று இந்தி ரீமேக்.. சூர்யாவை டேக் செய்து G V பிரகாஷ் கொடுத்த செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.

Soorarai Potru Hindi Sudha Kongara GV Prakash Composing Session
Advertising
>
Advertising

Also Read | "விரைவில் தென்னிந்திய சினிமாவில்".. சென்னை ஜவுளி கடை திறப்பில் 'நம்ம மயில் பொண்ணு' ஜான்வி!   

இவர் இயக்கிய துரோகி, இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரின் மூன்றாவது படமாக சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.

Soorarai Potru Hindi Sudha Kongara GV Prakash Composing Session

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகாமடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தின் பாடல் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் சூர்யா & ராஜ சேகர் பாண்டியனை டேக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி. வி‌. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார். இந்த பாடல் பதிவு நிகழ்வில் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா கலந்து கொண்டார்.

சுரரைப் போற்று இந்தி ரீமேக் படத்திற்கு பிறகு KGF 2 மூலம் கவனம் பெற்ற ஹோம்பாலே   நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க  இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read | "என்னை சுத்தி சர்ச்சைகள் வந்ததும்.. இந்த இடத்துக்கு நான் வர".. CWC அஸ்வின் Open டாக்!!.. Exclusive

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai Potru Hindi Sudha Kongara GV Prakash Composing Session

People looking for online information on GV Prakash, Soorarai Pottru, Soorarai Pottru Hindi, Sudha Kongara will find this news story useful.