சூரரைப்போற்று இந்தி ரீமேக்.. ஷூட்டிங் SPOT-க்கு திடீர் விசிட் அடித்த பிரபல தமிழ் நடிகை! வைரல் BTS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் உருவாகிறது.

Advertising
>
Advertising

Also Read | TRENDING: ஹனிமூனில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. ரொமான்டிக் லுக்கில் விக்கி பகிர்ந்த சூப்பர் PHOTOS!

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 12-ல் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

கேப்டன் கோபிநாத் அவர்களின் ஏர் டெக்கான் நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து Simply Fly என்ற கோபிநாத்தின் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது. 78-வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் திரையிடப்பட்ட 10 சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட வட்டார மொழி படமாகவும் சாதனை படைத்தது.

சூரரைப் போற்று  படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.  சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

இந்த படத்தில் தமிழ் மொழியில் நடித்த அபர்னா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். இவர் பிரபல இந்தி சீரியல் நடிகை ஆவார். கலர்ஸ் டிவியின் காதல் மெகா சீரியலான மேரி ஆஷிகி தும் சே ஹியில் இஷானி வகேலாவாக நடித்ததற்காக புகழ்பெற்றவர்.

2018 ஆம் ஆண்டு விஷால் பரத்வாஜின் படகா என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இர்ஃபான் கான் மற்றும் ஷிதாத் ஆகியோருடன் ஆங்கிரேஸி மீடியம் (2020) படத்தில் ராதிகா கதாநாயகியாக நடித்தார்.  தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிலும் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பில் நடிகை அபர்னா பாலமுரளி, அக்சய் குமாரை சந்தித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Also Read | நயன் - விக்கி ஹனிமூனுக்காக தங்கியிருக்கும் பிரபல ஹோட்டல்.. ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா?

தொடர்புடைய இணைப்புகள்

Soorarai Potru Hindi Remake Aparna Balamurali BTS Picture Goes Viral

People looking for online information on Aparna Balamurali, Soorarai Potru, Soorarai Potru Hindi Remake will find this news story useful.