'வெள்ளத்தில் உயிரிழந்த தந்தை!'.. தவித்த 4 பெண் குழந்தைகள்.. சோனுவின் நெகிழ்ச்சி செயல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா காலதம் தான் வில்லன் நடிகராக மட்டுமே நமக்கெல்லாம் அறிமுகமாகியிருந்த சோனு சூட்டை ரியல் ஹீரோவாக பிரதிபலித்தது.

தமது சமூக வலைதளங்களில் யார் என்ன கோரிக்கை வைத்தாலும் விரைந்து சென்று அவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது அன்பு கரங்களை நீட்டி வரும் முன்னணி நடிகர் சோனு சூட். மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த பேருதவிகள் மக்களின் நெஞ்சை நெகிழச் செய்தன.

இந்நிலையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவவிருப்பதாக சோனு குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் உத்ரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, ஆலம் சிங் புண்டிர்வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். ஆலம் சிங் புண்டிரின் வருமானம் மட்டுமே அவரது குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில், அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததை அடுத்து, அவரது மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் பரிதவித்து போயினர்.

 

இதனால் சமூக வலைதளங்களில் சோனுசூட்டிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அவர் உயிரிழந்த ஆலம் சிங்கின் நான்கு பெண் குழந்தைகளான அஞ்சல், அந்தரா, காஜல், அனன்யா ஆகியோரின் படிப்புச் செலவை தாமே ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமின்றி ஆலம் சிங் புண்டிரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் தேவையான உதவிகளையும் செய்வதாக தெரிவித்த சோனு சூட்‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’என  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: மக்களுடன் முதல் சந்திப்பு..  ‘ஆரி சொன்ன அந்த வார்த்தை!’.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

Sonu Sood supports victims UttarakhandDisaster சோனு சூட்

People looking for online information on Sonu Sood, UttarakhandDisaster will find this news story useful.