சோனியா அகர்வால், விமலா ராமன் இணைந்து நடிக்கும் ஹாலிவுட் தரத்திலான ஹாரர் படம்! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும். ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம்  நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும் .இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற பெயரில் உருவாகியுள்ளது.

Sonia Agarwal, Vimala Raman Starring Grandma Horror movie
Advertising
>
Advertising

இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர். மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Sonia Agarwal, Vimala Raman Starring Grandma Horror movie

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட  சோனியா அகர்வால் ,சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இப்படத்தை  GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், ஸ்டண்ட் - முகேஷ் ராஜா, சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.

திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் 'கிராண்மா'  விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sonia Agarwal, Vimala Raman Starring Grandma Horror movie

People looking for online information on Charmila, Grandma, Sonia Agarwal, Vimala Raman will find this news story useful.