சோனியா அகர்வால்.. "காதல் கொண்டேன்", "7ஜி ரெயின்போ காலனி" ஹீரோயின்.. சீரியலில் மாஸ் எண்ட்ரி! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சோனியா அகர்வால், பிரபல தொலைக்காட்சியின் பிரபல சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் நடித்தவர் சோனியா அகர்வால். இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான  நடிகை சோனியா அகர்வால் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், மதுர, திருட்டு பயலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து சோனியா அகர்வால், குயின் வெப் சீரிஸிலும் கூட நடித்திருந்தார். இதனிடையே சோனியா அகர்வால் மீண்டும் எப்போது அடுத்த புராஜக்ட்களில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இப்போது சின்னத்திரை சீரியலில் செம்மயான ஒரு கெஸ்ட் ரோலை சிறப்பு காட்சிக்காக நடிக்கிறார்.

ஆம், சன் டி.வியின் ஒளிபரப்பாகி வரும் சென்சேஷனல் டிவி சீரியல் தான் பாண்டவர் இல்லம். இந்நிலையில் தான், இந்த சீரியலும், சன் டி.வியின் மற்றொரு சீரியலான நினைத்தாலே இனிக்கும் சீரியலும் இணையும், "பாண்டவர் இல்லம் - நினைத்தாலே இனிக்கும் - சிறப்பு ஒரு மணி நேர ஸ்பெஷல்" எபிசோடில் நடிகை சோனியா அகர்வால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்த சிறப்பு காட்சி ஆகஸ்டு 1, ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி இந்த சீரியலில் சோனியா அகர்வால் நடிக்கும் சிறப்பு காட்சிக்கான ப்ரோமோ சன் டி.வியில் மட்டும் அல்லாது, சன் டி.வியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ: குஷ்பு.. நடிகை.. அரசியல் பிரமுகர்.. சீரியலில் செம்ம கெஸ்ட் ரோல்!.. கூடவே பிரபல பிக்பாஸ் நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Sonia Agarwal guest role in sun tv serial viral promo

People looking for online information on Sonia Agarwal will find this news story useful.