குழந்தையின் போட்டோவை முதல்முறையாக வெளியிட்ட சோனம் கபூர்.. பையன் பேரு இது தானாம்! வைரல் PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சோனம் கபூர் தனது குழந்தையின் புகைப்படம் மற்றும் குழந்தையின் பெயரை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | செம..தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்'.. படத்தில் இணைந்த பிரபல இளம் நடிகர்! இவரா?

தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். சோனம் கபூர்.

கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார்.

சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

நடிகை சோனம் கபூருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் (20.08.2022) ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்த சோனம் கபூர் மற்றும் ஆனந்தின் அறிக்கை வெளியிட்டனர். அதில், "20.08.2022 அன்று, எங்கள் அழகான ஆண் குழந்தையை நாங்கள் குனிந்த தலையுடனும் இதயத்துடனும் வரவேற்றோம். இந்த பயணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. இது ஆரம்பம் மட்டுமே  எங்கள் வாழ்க்கை நிரந்தரமானது என்று எங்களுக்குத் தெரியும். - சோனம் மற்றும் ஆனந்த்," என்று அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும், சோனம்கபூர் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "நம் வாழ்வில் புதிய அர்த்தத்தை சுவாசித்த சக்தியின் ஆவியில்... அபரிமிதமான தைரியத்தையும் வலிமையையும் கொண்ட ஹனுமான் மற்றும் பீமனின் ஆவியில்...புனிதமான, உயிரைக் கொடுக்கும் மற்றும் நித்தியமாக எங்களுடைய எல்லாவற்றின் ஆவியிலும், நாங்கள் எங்கள் மகன் "வாயு கபூர் அஹுஜா"-வுக்கு ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்.

இந்து வேதங்களில் வாயு என்பது பஞ்ச தத்வாக்களில் ஒன்றாகும். அவர் சுவாசத்தின் தெய்வம், ஹனுமான், பீம் மற்றும் மாதவ் ஆகியோரின் ஆன்மீக தந்தை மற்றும் அவர் காற்றின் நம்பமுடியாத சக்திவாய்ந்த இறைவன்.

பிராணன் என்பது வாயு, பிரபஞ்சத்தில் வாழ்க்கை மற்றும் புத்திசாலித்தனத்தின் வழிகாட்டும் சக்தி. பிராணன், இந்திரன், சிவன் மற்றும் காளி ஆகிய தெய்வங்கள் அனைத்தும் வாயுவுடன் தொடர்புடையவை. அவர் தீமையை அழிக்கவும்  எளிதில் உயிர்களை சுவாசிக்கவும் வைக்க முடியும். வாயு என்றால் வீரம் & வசீகர அழகு என்று கூறப்படுகிறது.

எங்கள் குடும்பத்தினருக்கான உங்கள் தொடர்ந்த வாழ்த்துகளுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி." என சோனம் கபூர் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | 150 கிமீ வேகத்தில் G P முத்து உடன் பைக் ரைடு.. TTF வாசன் மீது பாய்ந்த போலீஸ் கேஸ்! முழு தகவல்

Sonam Kapoor shared her baby boy Image and Name

People looking for online information on Sonam Kapoor, Sonam Kapoor shared her baby boy Image will find this news story useful.