சோனம் கபூரின் வளைகாப்பு போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.
Also Read | “பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே… ”… ‘டான்’ பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் Tweet
தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின் மகள் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். சோனம் கபூர். கடந்த 2018-ல் நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
மேலும் நடிகை சோனம் கபூர், சில நாட்களுக்கு முன் 5 முறை போட்டோ ஷூட் நடத்தினார். சமீபத்தில் கூட முதல்முறையாக நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோர் தங்களது ‘பேபிமூனுக்காக’ இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர். கர்ப்பமான பின் தனது செல்ஃபி போட்டோவை இணையத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சோனம் கபூர், கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் லண்டனில் தனது வளைகாப்பு விழாவை கொண்டாடினார். அவரது சகோதரி ரியா கபூர் மற்றும் குடும்பத்தினர் & நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Also Read | ஈஷா சத்குரு நிகழ்ச்சியில் சமந்தா.. செம வைரலாகும் புதிய போட்டோஷூட் போட்டோஸ்.!