நடிகை சோனம் கபூர் கர்ப்பம்.. கணவர் மடியில் படுத்து வெளியிட்ட வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை சோனம் கபூர் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

வலிமை தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர். 2007-ம் ஆண்டு பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் ரன்பீர் கபூர், சோனம் கபூர் நடித்து வெளியான படம் 'சாவரியா'. தஸ்தயேவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் குறுநாவலை மையமாக வைத்து இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின் கடந்த 2013ம் ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘ராஞ்சனா - அம்பிகாபதி’ படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர், சோனம் கபூர். கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார்.  இந்நிலையில், கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதில், "நான்கு கைகள். எங்களால் முடிந்தவரை உன்னை வளர்க்க. இரண்டு இதயங்கள், அது உன்னுடைய ஒவ்வொரு அடியிலும் ஒற்றுமையாக துடிக்கும். ஒரு குடும்பம், யார் பொழிவார்கள்.. அன்புடனும் ஆதரவுடனும்." என குறிப்பிட்டுள்ளார். மேலும் சோனம் கபூர் கருப்பு நிற உடை  அணிந்து ஆனந்த் அஹுஜாவின் மடியில் தலை சாய்ந்தபடி காணப்பட்டார். அஹூஜா சோனமின் வயிற்றின் மீது கை வைத்தபடி காணப்பட்டார்.

 

Sonam Kapoor Announce Her Pregnancy Image goes viral

People looking for online information on Sonam Ahuja, Sonam Kapoor will find this news story useful.