"DIRTY COMMENTS.. எல்லார் வீட்டிலும் பெண்கள் இருக்காங்க!".. வெளுக்கும் சோனா .. பரபரப்பு வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சோஷியல் மீடியாவில் தான் உட்பட பல நடிகர்களையும் நடிகைகளையும் பற்றி தவறுதலான கமெண்டுகள் செய்யப்படுவதை பற்றி நடிகை சோனா காட்டமான பேட்டி கொடுத்துள்ளார்.

இதுபற்றி  அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒரு படத்தை பற்றியோ, ஒரு படத்தில் நானோ அல்லது வேறொரு நடிகரோ நடித்த கதாபாத்திரத்தை பற்றியோ விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் பெர்சனலாக நடிகர், நடிகையரை பற்றி தவறுதலாக பேசுவது.. படுக்கையில் இருக்கும்படியான டர்ட்டி கமெண்டுகளை பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறியுள்ளார்.

மேலும் பேசியவர், ஒரு பாய்ண்டில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்க வேண்டும். எல்லார் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அன்புசரவணன் இயக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க வந்தபோது சோனா இந்த பேட்டியை அளித்துள்ளார். இதேபோல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர்ஸ் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் சோனா நடிக்கிறார். இந்த சீரியலை சந்தான, டாக்டர் சேது நடிப்பில் ‘வாலிப ராஜா’ படத்தை இயக்கிய சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார்.

ALSO READ: அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு?.. வெளியான சிகிச்சை புகைப்படங்கள்!! அவரே சொன்ன விளக்கம்!

"DIRTY COMMENTS.. எல்லார் வீட்டிலும் பெண்கள் இருக்காங்க!".. வெளுக்கும் சோனா .. பரபரப்பு வீடியோ! வீடியோ

Tags : Sona

Sona reacts dirty comments on celebrities in social media

People looking for online information on Sona will find this news story useful.