ரம்யாவை 'வம்பிழுத்த' சோம்... இன்னமுமா அந்த 'சாக்லேட்' இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் பெரிதாக எந்தவொரு தாக்கமும் ஏற்படுத்தவில்லை என திட்டியவர்கள் கூட, தற்போது பாராட்டும் அளவுக்கு சோம் விளையாட ஆரம்பித்து இருக்கிறார். கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்க்கில் சோம் குக்கூவாக இருந்த அர்ச்சனா, சம்யுக்தா அணியே வெற்றி பெற்றது. இந்த மூவரும் நேரத்தை கணித்ததில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.

Somasekhar, Ramya Pandian's cute Conversation, Wins Internet

இதனால் இவர்களில் இருந்து கேப்டன் பதவிக்கு இந்த வாரம் சோம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் நேற்று ரம்யாவை திடீரென சோம் வம்பிழுத்தார். நீண்ட நாட்களாக சோம் முயற்சி செய்தும் ரம்யா சிக்க மாட்டேன் என நழுவி விடுகிறார். ஆனாலும் சோம் மனம் தளராமல் மீண்டும் நேற்று வம்பிழுத்தார். ஸ்னாக்ஸ் எனக்கு தரவில்லை என்பது போல ஆரம்பித்த இந்த பஞ்சாயத்து கடைசியில் சாக்லேட்டில் வந்து நின்றது.

இன்னமும் அந்த சாக்லேட்டை வைத்துக்கொண்டு சோம் சுற்றியதை பார்த்து பிக்பாஸே ஷாக் ஆகி இருப்பார். அப்போது அர்ச்சனா எழுந்து அந்த சாக்லேட்டை யாருக்கும் கொடுக்க மாட்டேன்னு சொல்றான் என அவர் பங்குக்கு சற்று கொளுத்தி போட்டார். ஆனாலும் சோம் மீண்டும் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் நீ தான் சாக்லேட் விஷயத்தை இழுத்தோம்னு தெரியாம நாங்க அர்ச்சனாவ திட்டிட்டோம் என கிண்டலடித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Somasekhar, Ramya Pandian's cute Conversation, Wins Internet

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.