OFFICIAL : பிக்பாஸ் போட்டியில் கலந்துக்குறாங்களா..?!! - பிரபல ஹீரோயின் கொடுத்த அதிரடி பதில்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்து பிரபல நடிகை அதிரடி பதில் கொடுத்துள்ளார். 

துல்கர் சல்மான் நடிப்பில் பிஜாய் நம்பியார் இயக்கிய சோலோ திரைப்படத்தில் ஹீரோயினாக கலக்கியவர் நேஹா ஷர்மா. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பிசியாக கலக்கி வருகிறார். இதனிடையே நேஹா ஷர்மா தற்போது தொடங்கவுள்ள பிக்பாஸ் ஹிந்தி சீசன்-14ல் கலந்து போகிறார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்தன. 

இதையடுத்து நடிகை நேஹா ஷர்மா இதுகுறித்த தனது அதிரடி பதிலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்., ''தயவு செய்து இதை என் தரப்பில் இருந்து வரும் உறுதி தகவலாக எடுத்து கொள்ளுங்கள்., நான் இந்த பிக்பாஸ் சீசனில் இல்லை'' என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக வந்த வதந்திக்கு முற்றி வைத்துள்ளார் இவர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் பற்றி நேஹா ஷர்மா கருத்து | solo actress neha sharma opens on contesting in biggboss

People looking for online information on Biggboss, Neha Sharma will find this news story useful.