சாமி.. சாமி.. சுட்டிச் சிறுமியின் கியூட் டான்ஸ்.. வைரல் வீடியோவுக்கு ராஷ்மிகாவின் கமெண்ட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புஷ்பா படத்தின் சாமி.. சாமி பாடலுக்கு சிறுமி ஒருவர் நடனமாடும் வீடியோவை அமெரிக்க ராப் பாடகரான Snoop Dogg பகிர, அதில் ராஷ்மிகா கமெண்ட் செய்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | 'துணிவு' படத்தின் படப்பிடிப்பு.. அஜித்தை சந்தித்த பிரபல தயாரிப்பாளர்! வைரல் ஃபோட்டோ!

‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடல் பிரபலமடைந்த ராஷ்மிகா, கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின்னர் விஜய் தேவர் கொண்டாவுடன்‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் மூலமும், பின்னர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்ததன் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா படத்தில் நடித்து இருந்தார். சுகுமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் சாமி.. சாமி பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ராஷ்மிகா போலவே நடனமாடி ரசிகர்கள் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.

 

இந்நிலையில், ராப் பாடகரான snoop dogg இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அதிலும் ராஷ்மிகா கமெண்ட் செய்யப்போக இந்த வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.

Also Read | நடிகர் அஜித்தை ஆசிர்வதித்த வயதான பெண்மணி.. பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Snoop Dogg shares video of girl dancing Pushpa song Rashmika reacts

People looking for online information on American rapper Snoop Dogg, Pushpa song, Rashmika Mandanna, Snoop Dogg will find this news story useful.