கோபத்தில் கர்ஜித்த ‘போலீஸ்’ சினேகன்.. "எனக்கும் கத்த தெரியும்".. டென்ஷன் ஆன சுருதி BBULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BBUltimate, 11, பிப்ரவரி 2022 : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையே நிலவிவரும் திருடன் போலீஸ் டாஸ்க் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

snehan suruthi viral talk BB ultimate tamil bigg boss OTT
Advertising
>
Advertising

இதில் நடந்த களேபரத்தில் முன்னதாக அனிதாவின் கையில் அடிபட்டுவிட்டது. ஆனாலும் திருடர்கள், திருட்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் சினேகன் கோபாக கத்த தொடங்கிவிட்டார்.

யார் எடுத்தது?

ஆம், இப்படி ஒரு இக்கட்டான நேரத்தில் குறிப்பிட்ட அந்த பொருட்களை யார்  எடுத்தது? என பாடலாசிரியர் சினேகன் காட்டு கத்து கத்திக் கொண்டிருந்தார்.

போலீஸ் உடையில் கிட்டத்தட்ட போலீஸாகவே மாறிய சினேகன், “ஒருவருக்கு அடிப்பட்டிருக்கிறது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் எப்படி எடுப்பீர்கள்? யார் எடுப்பீர்கள்?” என ஆவேசமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

Also Read: "சத்தியமா செத்துருவேன் ஜூலி".. "பண்ணுங்க வனிதா அக்கா".. ஜூலியின் அசுர ஆட்டம் Started!

கத்தாதீங்க சினேகன்

அப்போது இந்த பக்கம் வனிதா, அனிதாவுக்கு முதலுதவி செய்துகொண்டே, “சரி விடுங்கள், இப்போது அதனால் என்ன? பாய்ன்ட்ஸ்ட் கிடைக்காமல் போகும், அவ்வளவு தானே? கத்தாதீங்க.. ” என அட்வைஸ் செய்துகொண்டிருந்தார். ஆனால் யார் எடுத்தது என தெரிந்தே ஆகவேண்டும் என கொந்தளித்து கத்திய சினேகனிடம் அங்கிருந்தவர்கள் அனைவரும்  தாமரை, தாமரை என கோரஸாக கத்தினர்.

உச்சகட்ட கோபத்தில் கத்திய சினேகன்..

இதனிடையே தூரத்தில் இருந்து வந்த  சுருதி, சினேகனுக்கு யார் எடுத்திருக்க முடியும் என்கிற தனது யூகத்தை விளக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி ஷிஃப்டில் இருந்த 2 பேர் தான் எடுத்திருக்க முடியும் என சுருதி முழுதாய் சொல்லி முடிப்பதற்குள் ஆவேசத்தின் உச்சத்தில் கத்திய சினேகன், சுருதியிடம் மீண்டும், “ஒருவருக்கு அடிப்பட்டிருக்கிறது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் யார் எடுத்தாலும் தப்பு தப்புதான்” என பேசினார்.

என்ன கத்துறீங்க? எனக்கும் கத்த தெரியும்.

உடனே டென்ஷனான சுருதி, “என்ன கத்துறீங்க? எனக்கும் கத்த தெரியும். சொல்ல வந்தா, நீங்க பாட்டுக்கும் கத்துறீங்க” என மல்லுக்கட்ட, அதற்குள் அங்கு தாமரை வருகிறார். தாமரையிடம் வனிதா, “நீ திருடிறியா?” என கேட்டுக்கொண்டிருக்க சினேகனை பலரும் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது சினேகனோ, சுருதியை பார்த்து “நீங்க எல்லாம் தாமரை என சொன்னதால் தான் கத்தினேன்” என கூறினார்.

உடனே அதிர்ந்து போன சுருதி, “நாம அங்க இருந்து சும்மா தானே வந்தோம். தாமரை என இங்கிருந்தவர்கள் தானே சொன்னார்கள்?” என யோசித்திருப்பார் போல, உடனே டென்ஷன் ஆகி, “ஹலோ.. நான் சொல்லவே இல்லை.. தாமரையின் பெயரை நான் சொல்லவே இல்லை” என உண்மையை கூறினார்.

முன் அனுபவத்தால் எச்சரிக்கையான சுருதி

ஏற்கனவே 5வது சீசனில் சுருதிக்கும் தாமரைக்குமான காயின் விவகார சண்டை பலரும் அறிந்தது. இந்நிலையில் இப்படி தாமரை பெயரை சொல்லாமலே தனது பெயரை சினேகன் சொல்லிவிட்டதால் சுருதி இன்னும் எச்சரிக்கையாகி இருப்பார் போல.

அதனால் தான் உடனடியாக அதை மறுத்து சொல்லிவிட்டார். தவிர  அந்த இடத்துக்கு தாமரையும் வந்துவிட்டதால், இந்த விஷயத்தில் தாமரை பெயரை தான் சொல்லவில்லை என்பதை அங்கேயே வைத்து க்ளியர் பண்ண வேண்டிய கட்டாயத்தில் சுருதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "ஜூலி அத பண்ணா, இவருக்கு என்ன?".. சுருதியிடம் அப்படி என்னதான் சொன்னார்  சினேகன்?.. கொதிக்கும் நெட்டிசன்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Snehan suruthi viral talk BB ultimate tamil bigg boss OTT

People looking for online information on BB Ultimate Tamil, Bigg Boss OTT, Snehan, Snehan suruthi talk, Suruthi will find this news story useful.