புதுமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சைபர் கிரைம் உலகை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த த்ரில்லர் படம் உலகெங்கும் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்புக் காட்சியினை விஷால் வெளியிட்டுள்ளார்.
அதில், எடுத்தவுடன் வெல்கம் டு டிஜிட்டல் இந்தியா என வீடியோ தொடங்குகிறது. அந்த காட்சியில் நாயகியுடன் விஷால் இருக்கிறார். ஒரு வயதான ஏடிஎம் செக்யூரிட்டியிடம் ஒருவன் கை ஓங்குகிறான். அவனை அழைத்துச் சென்று நியூஸ் பேப்பர் படிக்கச் சொல்கிறார் விஷால்.
அந்த நியூஸ் பேப்பரின் செய்திகளாக, இந்தியர்களால் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை மீட்போன் என பிரதமர் உறுதி, பூச்சி மருந்து குடித்து டெல்டா விவசாயிகள் தற்கொலை, சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு- சொந்த நிலங்களில் இருந்த மக்கள் விரட்டியடிப்பு ஆகிய செய்திகள் இருக்கின்றன. இதில், “கறுப்புப் பணம் மீட்பது நடந்துச்சா? .. விவசாயிகள் தற்கொலை நடக்குதுல்ல?” என விஷால் கவுண்டர் கொடுத்துக் கொண்டே வருகிறார்.
இறுதியில் அந்த நபரிடம், “இதில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து எதிர்த்து கேட்க முடியாத நாம் தான் நம்மை விட வலிமை குன்றியவர்களிடம் வீரத்தை காட்டுகிறோம், நீ அந்த வயதான ஏடிஎம் செக்யூரிட்டியிடம் காட்டுகிறாய்!” என கோபம் தெறிக்க பக்குவமாக அட்வைஸ் செய்கிறார். இந்த சிறப்புக் காட்சியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ALSO READ: வலிமை 'அப்டேட்' கேட்கும் ரசிகர்கள்.. நடிகர் 'அஜித்' வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!