40 வருட பழைய கொலை வழக்கை கையில் எடுக்கும் ஹீரோ.. மிரட்டலான முன்னோட்ட காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சிபிராஜ். இவர் தற்போது கபடதாரி என்ற திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கன்னட படத்தின் ரீமேக்கான இத்திரைப்படத்தை தனஞ்செயன் தயாரிக்க, ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். 

நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளை (ஜனவரி 28) முதல் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது கபடதாரி படத்தின் Sneak Peek காட்சி வெளியாகியுள்ளது.

இதில் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு கொலை வழக்கு குறித்து சிபிராஜ் விசாரிக்க, பத்திரிக்கையாளரான ஜெயப்பிரகாஷும் அதுகுறித்த தகவல்களை ஆராய்கிறார். மிரட்டும் பின்னணி இசையுடன், எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் இந்த முன்னோட்ட காட்சி வெளியாகியுள்ளது. 

 

40 வருட பழைய கொலை வழக்கை கையில் எடுக்கும் ஹீரோ.. மிரட்டலான முன்னோட்ட காட்சி வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிபிராஜின் கபடதாரி பட முன்னோட்ட காட்சி | Sneak peak of sibiraj's kabadadaari is released

People looking for online information on Kabadadaari, Kabadadaari Sneak Peek, Pradeep Krishnamoorthy, Sibiraj will find this news story useful.