விஜய் பாடலுக்கு சிறுமி ஒருவர் செய்துள்ள டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவிருக்கிறார்.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் இடம்பெற்ற பிகிலு பிகிலும்மா பாடல் சூப்பர் அடித்த ஒன்று. இப்பாடலுக்கு பலரும் டிக்டாக் வீடியோக்களை செய்து வெளியிட்டு வருகின்றனர். அப்படி, இந்த சிறுமி செய்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. சுமார் பத்து லட்சம் பார்வையாளர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர். இதுமட்டுமின்றி மாஸ்டர் பட பாடல்களுக்கும் ரசிகர்கள் பலர் டிக்டாக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.