சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

Also Read | ஸ்ருதிஹாசன் போட்ட மேக்கப்.. அப்றம் செஞ்ச சேட்டைதான் ஹைலைட்டே.. தீயாய் பரவும் Cute வீடியோ
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.
சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.
டான் திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த ஆண்டு இறுதியிலேயே முடிந்த நிலையில் மார்ச் 25 அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் அதே நாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் வெளியாக இருந்தது. மேலும் அந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமம் லைகா நிறுவனம் வாங்கியிருந்தது. இதனால் டான் படத்தின் ரிலீஸ் தேதி மே 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருந்தது.
டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae) ஆகிய இரண்டு சிங்கிள் பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன.
இந்நிலையில் மூன்றாவது சிங்கிள் பாடல் Private Party நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வினாடி பாடலின் சிறு வீடியோவும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார். ஜோனிதா காந்தி - அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்த காம்போ செல்லம்மா பாடலையும், அரபிக்குத்து பாடலையும் கொடுத்தவர்கள் என்பதால் இந்த பாட்டிற்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8