வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி , ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கியுள்ள புதிய அமேசான் ஒரிஜினல் தொடர் வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி.
மும்பை, இந்தியா—17 நவம்பர், 2022: இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும் பிரைம் வீடியோவில் அமேசான் ஒரிஜினல் தொடரான வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் (Andrew Louis) ஆல் உருவாக்கப்பட்டுள்ள 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த த்ரில்லர் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பிரைம் சந்தாதாரர்களுக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் காணக் கிடைக்கும்.
கிசுகிசுக்கள் என்று பொருள்படும் வதந்தி என்ற இந்த சீரிஸின் தலைப்புக்கு இணங்க, இதன் அறிமுக நடிகையாக சஞ்சனா (Sanjana) ஏற்றுள்ள இளம் மற்றும் அழகு ததும்பும் வெலோனி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகிற்கு இந்தக் கதைக்களம் உங்களை அழைத்துச் செல்கிறது. சற்று மனக்கலக்கத்துடன் ஆனால் மன உறுதியோடு கூடிய காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா (S.J. Suryah), பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார். ஆனாலும் உண்மையைக் கண்டறிவதில் தன் விடா முயற்சியை தொடர்கிறார்.
ஓரு செல்வச் செழிப்பான அடுக்குகளால் ஆன ஒரு சிறிய நகரம் வெலோனியின் கதையை சிக்கலானதாக ஆக்கும் அதே சமயம் அதை ஒரு புதிரான விந்தைகள் நிறைந்ததாகவும் மாறசெய்கிறது. ‘கொலைகாரன்’ திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸின் இந்த சீரிஸ்க்கு "கொலைகாரன்" மற்றும் "கபடதாரி" திரைப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் K கிங், இசையமைத்துள்ளார். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் "பேப்பர் ராக்கெட்" எனும் படைப்புக்கு இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் இந்த தொடரின் பின்னணி இசை மற்றும் டைட்டில் ட்ராக்கை சைமன் K கிங் பதிவு செய்துள்ளார். இதற்காக, 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தியின் முழு ஒலிப்பதிவுக்கும் இசையமைத்துள்ளார். அத்துடன் வதந்தி, வலைத் தொடருக்காக பிரத்தியேகமாக ஒரு வகையான டைட்டில் ட்ராக்கையும் சைமன் K கிங் இயற்றியுள்ளார்.
இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் கு.கார்த்திக், பண்டைய தமிழ் இலக்கிய உரையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பாடகர் குழு டைட்டில் ட்ராக்கை வழங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் இதற்கு பங்களித்துள்ளனர்.