BREAKING: புஷ்கர், காயத்ரி & SJ சூர்யா இணையும் WEB SERIES… TITLE பற்றி வெளியான செம்ம UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ் ஜே சூர்யா முதல் முறையாக ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸின் தலைப்புப் பற்றிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

எஸ் ஜே சூர்யாவின் அறிமுகம்…

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் வெற்றியும் அவரை முன்னணி இயக்குனராக்கியது. குஷி படத்தை அவர் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். இன்றளவும் இந்த இரு படங்களும் அவரின் பேர் சொல்லும் படங்களாக உள்ளன.

இயக்கம் to நடிப்பு…

ஒரு கட்டத்தில் இயக்கத்தில் இருந்து விலகி நடிப்புக்கு சென்ற எஸ் ஜே சூர்யா, பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இறைவி, இசை, மெர்சல் மற்றும் மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.இப்போது  ராதா மோகன் இயக்கும் பொம்மை, கடமையை செய் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

Webseries…

இந்த படங்களை அடுத்து "கொலைகாரன்", "லீலை" போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கும் வெப் தொடரில் நடிக்கிறார். இந்த வெப் தொடரை விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினர் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது இந்த வெப் சீரிஸின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடருக்கு “RUMOUR (வதந்தி)” எனத் தலைப்பு வைக்கப்படுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து வரும் எஸ் ஜே சூர்யா முதல் முதலாக நடிக்கும் வெப் தொடரின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


இந்த வெப் தொடரின் முதல் கட்ட படப்பிடிப்பு நாகர்கோயிலில் 20 நாட்களும் சென்னையில் 20 நாட்களும் படப்பிடிப்பை நடத்தப்பட்டது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: புஷ்கர், காயத்ரி & SJ சூர்யா இணையும் WEB SERIES… TITLE பற்றி வெளியான செம்ம UPDATE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SJ suryah new webseries reportedly titled as Rumour

People looking for online information on Pushkar Gayathri, S J Suryah, Web Series will find this news story useful.